Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, October 12, 2014

சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காக குரல் கொடுக்க வேண்டும்: பொ.ஐங்கரநேசன் ​படங்கள் இணைப்பு 
13 Oct 2014
எமது மண்ணைப் படையினரின் மூலம் இலங்கை அரசாங்கம் பறித்து வைத்திருக்கிறது. மண் இல்லாமல் விதை இல்லை. எனவே விதை உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘விதை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு’ முறிகண்டியில் இருந்து கொழும்பை நோக்கி நேற்று  சனிக்கிழமை ஆரம்பித்திருக்கும் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.