Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, April 20, 2017

ஆலய வழிபாட்டிலும் வாழ்வாதாரத்திலும் இராணுவத் தலையீடு - வட்டுவாகல் மக்கள் கொதிப்பு
ஆலய  வழிபாட்டிலும் வாழ்வாதாரத்திலும் இராணுவத் தலையீடு - வட்டுவாகல் மக்கள் கொதிப்பு

வட்டுவாகலிலேயே எங்களைச் சுடுங்கள் – ஒளிப்படம் எடுத்த கடற்படையினரிடம் போராட்டத்தில்  ஈடுபட்ட மக்கள்

20-Apr-2017
எங்­கள் மத வழி­பாட்­டி­லும், எங்­கள் வாழ்­வா­தா­ரத் தொழி­லி­லும்  இரா­ணு­வத் தலை­யீடு இருப்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது என வட்­டு­வா­கல் மக்­கள் தெரி­வித்­த­னர்.அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது,

முல்­லைத்­தீவு வட்­டு­வா­க­லில் உள்ள வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க சப்­த­கன்­னி­மார் அம்­மன் ஆல­யப் பாரம்­ப­ரிய வழி­பாட்­டில் தொடர்ந்து இரா­ணு­வம் தலை­யி­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆண்­டாண்டு கால­மாக எமது முன்­னோர்­க­ளால் பின்­பற்­றப்­பட்­டு­வந்த வழி­பாட்டு முறையை நாம் இப்­போது பின்­பற்ற முடி­யாத அவல நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளோம். 

அடுத்து வரும் சில மாதங்களில் ஆரம்பமாகும் ஆலயத் திருவிழாவின்போது ஆலயத்தில் இருந்து கடற்கரைக்குச் சென்று நீரைப் பெற்று வந்து அந்த நீரில் விளக்கு எரியும் அற்புத வழிபாட்டைச் செய்து வருவது வழமை. 
கடந்த பல வருடங்களாக எங்கள் பாரம்பரிய வழிபாட்டு முறையை சிறந்த முறையில் பின்பற்ற முடியாத நிலையில் உள்ளோம்.

 வட்டுவாகல் நந்திக் கடற்கரையில் முகாம் அமைத்துள்ள இராணுவம் கடற்கரைக்குச் செல்லும் வீதியை மூடி வைத்துள்ளது. இதனால் எங்கள் மதவழிபாட்டை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. சுதந்திரமாக மதவழிபாட்டை மேற்கொள்வதற்கும், கடற்தொழிலை வட்டுவாகல் நந்திக் கடலில் செய்வதற்கும் அனுமதிக்கவேண்டும்.

எங்கள் காணிகளைப் பலவந்தமாகச் சுவீகரித்து முகாம் அமைத்துள்ள இராணுவம் வெளியேறுவதன் ஊடாகவே இதனை உறுதிப்படுத்த முடியும்-என்றனர்.