மைத்திரி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும்கூட காணி விடுவிப்பில்லை - வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டார்
Expose` : Good governance commander in chief completes two years but MR ‘s control still within army !

15-Apr-2017
தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னரே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தை வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டும் உள்ளார்.
Expose` : Good governance commander in chief completes two years but MR ‘s control still within army !

15-Apr-2017தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னரே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தை வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டும் உள்ளார்.
‘‘இந்தப் பிரச்சினைகளை ஆர◌ாய்ந்து காணிகளையும் கைதிகளையும் எப்போது எப்படி விடுவிக்கப் போகிறீர்கள் என்று அறியத்தரும்படி கேட்டிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நீங்கள் இப்போது அது பற்றி படைத் தளபதிகளுடன் பேசப்போவதால், மீண்டும் அது பற்றி நான் அவர்களிடம் தெரிவிக்கிறேன்’’ என்று நேற்றுத் தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்தார் அரச தலைவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இருவரும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை, அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனித்துச் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுக்களின் போதே மேற்படி விடயத்தை அரச தலைவர் குறிப் பிட்டார்.
‘‘திங்கட் கிழமை (நாளை), காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைத் தளபதிகள், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். அதற்கு முன்னோடி யாகவே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணி நேரம் வரையில் பேச்சு நீடித்தது’’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உதயன் பத்திரிகைக்குத்’ தெரிவித்தார்.
சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
காணி விடுவிப்புத் தொடர்பில் முதலில் பேசப்பட்டது. காணிகளை விடுவிக்கு மாறு ஒரு வருடத்துக்கு முன்னரே பணிப்புரை விடுத்துவிட்டேன், இதற்கான செயலணியை அமைத்து பகுதி பகுதியாகவேனும் காணி விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவி ல்லை, பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைத் தளபதிகளுடன் நீங்கள் பேசவுள்ளதால் இது தொடர்பான அறிவித்தலை அவர்களுக்கு மீண்டும் விடுக்கின்றேன் என்று அரச தலைவர் மைத்திரி, எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் கூறினார். மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் தொடர்பில், அரச தலைவருக்கு, இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.
அரசியல் கைதிகளின் விடுவிப்புப் பற்றி பேசப்பட்டது. பன்னாட்டு வெசாக் தினத்தை முன்னிட்டு தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அரசியல் கைதிகளின் கோரிக்கையை, இரா.சம்பந்தன், அரச தலைவரிடம் தெரியப்படுத்தினார். இதற்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கூடிய கைதிகளின் விவரங்களைத் தருமாறு கோரிக்கை விடுத்து ஒரு வருடமாகின்றது, அதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை. இதனை விரைவுபடுத்தி பெற்று நடவடிக்கை எடுக்கின்றேன் என்று கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.
மேலும், காணாமற்போனோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பிலும் அரச தலைவரிடம், எதிர்கட்சித் தலைவர் எடுத்துரைத்தார். இது தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என அரச தலைவர் குறிப்பிட்டார் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
