Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, February 2, 2017

Shockingly valvettu background of the group arrested ..



Wednesday, 1 February 2017


யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் அண்மைய காலங்களில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக வாள் வெட்டு சம்பவங்கள் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்.நல்லூர் அரசடி வீதி சந்தியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியிருந்தது.
இந்த சம்பவத்துடன், தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டிருந்தன.
6 வாள்கள், ஒரு கை கோடரி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முகமூடி உள்ளிட்டவைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் தற்போதும் கல்வியை தொடர்ந்துகொண்டிருப்பவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். காரணம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் இன்று கல்வியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வடமாகாணத்தின் கல்வி நிலை வேறு தரத்தில் இருந்தததை மறந்திருக்க முடியாது.
எனினும், தமிழ் மக்களை அழிக்கும் நோக்கிலும், தமிழர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மாணவர்கள் இவ்வாறு சமூக விரோத செயற்பாடுகளில் திட்டமிட்டு தள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.