ஒதியமலை தமிழர் பிரதேசங்களை கபளீகரம் செய்யும் வனத்திணைக்களம்
03-Dec-2016
03-Dec-2016
ஒதியமலை தமிழர் பிரதேசங்களில் பொதுமக்களின் சொந்தக் காணிகளை உள்ளடக்கிவனத்திணை க்களம் எல்லையிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்அதுமட்டுமல்லாமல் வனஜீவராசி திணைக்களம் சிங்கள மக்களுக்கு விலங்குகளிடம்இருந்து பாதுகாப்பளிக்கும் நோக்குடன் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதின் மூலம் நன்கு திட்டமிட்டு தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவர்களுடன் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் பிரதான கருவேப்பங் குள த்தை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஒதியமலை MU/123 பிரிவு கிராமசேவையாளரிடம் நேற்று) எடுத்துக் கூறியதுடன் குறித்த கிராம சேவையாளரைஅழைத்துச் சென்று பிழையான திட்டங்களையும் எல்லை களையும் காண்பித்துள்ளளர்கள்.
இதுதொடர்பாக குறித்த கிராமசேவையாளர் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வினவிய பொழுது அவர்கள் மகாவலிஅபிவிருத்தி திட்ட எல்லைகள் என்று கூறி மகாவலி அபிவிருத்தி திட்டமுகாமையாளரிடம் தொடர்புபடுத்தியுள்ளாதாக தெரி விக்கப்படுகின்றது.
தொடர்ந்து குறித்த பகுதி மக்களும் கிராமசேவையாளரும் மகாவலி அபிவிருத்திட்டமுகாமையாளரை அணுகிய போது அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(9) அரசாங்க அதிபருடன்குறித்த இடம் பார்வையி டப்படும் என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
மகாவலி திட்டத்தின் நோக்கங்களில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் என்னும்நோக்கமும் உள்ள டக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயம் செய்யும் குளத்தை அழிப்பதற்குஅவர்கள் திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டி க்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
