.போரில் பாதித்த மக்களுக்கான நியாயத்தை வழங்கும் அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்-அரசை எச்சரிக்கும் கலாநிதி பாக்கியசோதி
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக அரசா ங்கத்திடம் கையளிக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய அறிக்கையை அர சாங்கம் வெளியிடவில்லை என்றால், அதனை தான் பகிரங்கமாக வெளியிடப் போவதாக நல்லிணக்கத்திற்காக மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் நியமித்த நிறுவனத்தின் பிரதானியான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்.
போர் மற்றும் போருக்கு பின்னர் நடந்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை நிறைவேற்றுவதற்காக பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அதில் முழுமையாக அல்லது பெரும்பாலான பிரதிநிதிகள் சர்வதேச ரீதியில் தெரிவுசெய்யப்பட வேண்டும் என போரில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களில் அதிகமானோர் கோரியுள்ளதாக நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணிக்குழுவின் செயலாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் உட்பட நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயலணிக்குழு தயாரித்த இறுதி அறிக்கை தயாரிக்க ப்பட்டு ள்ளதாகவும் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் விடயத்தில் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்த தடையும் வரவில்லை எனவும் சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
தான் உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து வருவதால், அரசாங்கத்திற்காக பணியாற்றுவதாக சுமத்த ப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கூறியுள்ள சரவணமுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று பல வருடங்க ளாக பேசியவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவித்து ள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டு யோசனைக்கு அமைய ஏற்படுத்திக்கொண்டு உடன்பாட்டின்படி உண்மையை கண்டறிதல், நியாயத்தை நிறைவேற்றுதல், மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தடுத்தல் போன்றன குறித்து மக்களின் கருத்தை அறிய நியமிக்கப்பட்ட செயலணிக்குழுவின் பணிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி யுடன் முடிவடைய உள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள், வடமத்திய, வடமேல், மத்திய, மேற்கு, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்கள் ஆகியவற்றில் செயல ணிக்குழு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.

.jpg)