12 வயது சிறுமியை கூட்டாக வல்லுறவு! தலைமறைவான பிக்குவும் கைது
July 31, 2016
மாத்தறை பிரதேசத்தில் 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு இராணுவ வீரரும், சந்தேக நபர்களுக்கு அறையை வாடகைக்கு வழங்கிய நபரும் ஒரு பிக்குவும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
12 வயதான தமது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.
மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கடந்த 21ம் திகதி இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் 9 பேர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன் மறுதினம் மற்றுமொரு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பலரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் சிறுமியை விடுத்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் அடிக்கடி செல்லும் விகாரைக்கு சிறுமி சென்றுள்ளார்.
விகாரைக்கு சென்ற சிறுமியை பிக்கு ஒருவர் அறைக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பிக்கு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிக்குவையும் கைது செய்துள்ளனர்
12 Year Old Girl Child Gang Raped: Police On The Hunt For A Buddhist Monk
July 30, 2016
At least 12 people have been arrested and remanded for allegedly gang raping a 12 year old child girl in Matara. Among those arrested is a soldier as well as the woman who had rented out a room to the rapists.
The police is also currently on the lookout for a Buddhist Monk who had allegedly raped the girl. The monk is believed to be in hiding and the court has issued a foreign travel ban on the monk.
On July 10, the parents of the victim had lodged a complaint with the police informing them that their 12 year old daughter had gone missing. Subsequently, after a special search operation by the Matara Children and Women Bureau, the girl was found on July 21.
OIC of the Bureau Keshala Bogahawatte told media that in one instance the girl had been raped at least by 9 men and on same day she was taken to another house in the night where she was raped by more men.