[ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 03:02.01 PM GMT ]
பௌத்த மதம் மற்றும் ஏனைய மதங்களில், மத முன்னேற்றத்திற்கு சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

ஏனெனில், சிறுவர்களின் ஜாதகம் அல்லது பெற்றோருக்கு அவர்களை பராமரிக்க முடியாத சூழலில் இந்த சிறுவர்கள் மத முன்னேற்றத்திற்காக அவர்களுடைய மத நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு இளமைப் பருவத்தை இழந்து துறவியாகும் சிறுவர்களுடைய மனதில் கோபம், வைராக்கியம், சமுதாயத்தில் வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி, வலுக்கட்டாயமாக பௌத்த மதத்தில் சிறுவர்கள் துறவிகளாக்கப்படுகின்றனர். இதற்கு பெற்றோரும் சம்மதிக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.
அதனால் தான் வளர்ந்த துறவிகள் அரக்க குணமுடையவர்களாக உள்ளதை அவதானிக்க முடிகிறது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.