போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : டெனீஸ்வரன்
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்' தலைமையில் நடைபெற்றது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=866614148315583369#sthash.FLwGT9hJ.dpuf

15 ஜுலை 2015, புதன்
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்' தலைமையில் நடைபெற்றது.
குறித்த மாநாடு தொடர்பில் அமைச்சர் டெனீஸ்வரன் உரையாற்றுகையில்,
எமது வடமாகாணத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரும் போரால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம்.குறிப்பாக உயிரிழப்பு,சொத்து இழப்பு போன்றவற்றால் எமது மக்கள் மனதளவில் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த போரின் வாயிலாக எமது மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் நான் எனது அமைச்சுப் பொறுப்பை பதவியேற்றதன் பின்னர் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களிற்கு செல்கின்ற போது மிகவும் எனது மனதைப் பாதித்த விடயமாக எமது இனத்திற்காக பல தியாகங்களை செய்தவர்கள் அன்றாட உணவிற்கு கையேந்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.
ஆகவே தான் இவர்களை பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் தான் எனது மனதில் ஆழப்பதியப்பட்டது.
அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டுக்கான எனது கொள்கைப் பிரகடனமாக பின்வருவோருக்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னுரிமை அடிப்படையில் சில முக்கியமான நபர்களை பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது.
அதன் பின்னர் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஐந்து மாவட்டங்களிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு தற்போது அந்த வாழ்வாதார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.
குறிப்பாக மூன்று படிவங்கள் எமது கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வழங்கப்பட்டன.
1) புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பங்களுடன் வசிக்கும் போராளிகளின் தரவுப் படிவம்
2) போரால் உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரம்
3) தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரத் திரட்டுப் படிவம்
அதன் அடிப்படையில் கடந்த யூன் மாதம் 30 ஆம் திகதி இந்த படிவங்களினை சேகரிப்பதற்கான இறுதித் தினமாக அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் மேற்படி படிவங்கள் பூரணப்படுத்தப்பட்டு ஏறக்குறைய 12676 படிவங்கள் எமது திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பங்களுடன் போரால் உயிரிழந்த தடுப்புக் காவலில்
வசிக்கும் போராளிகள் தரவுகள் போராளிகளின் குடும்ப விபரம் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்
யாழ்ப்பாணம் 1626 1550 157
கிளிநொச்சி 1687 1664 61
மன்னார் 673 905 38
வவுனியா 595 592 23
முல்லைத்தீவு 1741 1319 45
------- --------- --------------
6322 6030 324
குறித்த வேலைத்திட்டத்திற்காக எனது அமைச்சினால் 43 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கி இருக்கிறேன்.குறிப்பாக மேற்படி ஒதுக்கீடானது ஒப்பீட்டளவில் பாரியளவில் இருக்கிறது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளோடு ஒப்பிடும் போது ஒரு கணிசமான அளவே இவ்வாண்டு பூரணப்படுத்த முடியும். என்றும் அவர் தெரிவித்தார்.