Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, April 17, 2015

சு.க.வை கட்­டுப்­ப­டுத்த முடி­யா­விடின் தலைவர் பத­வியை விட்டு வில­குங்கள் மைத்திரிக்கு விக்­ர­ம­பாகு அறிவுரை

Home
by Priyatharshan on Fri, 04/17/2015
அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் தனது கட்­சியை கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்ள முடி­யா­விடின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக சுதந்­திரக் கட்­சி யின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்டும். இல்­லையேல் ஜனா­தி­பதி பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டும் என்று நவ சம சமாஜக் கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அத்­தோடு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­னரை தன்னால் முடி­யா­விடின் ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சேன கட்சித் தலைவர் பத­வியை விட்டு விலக வேண்டும். இல்­லையேல் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து நீங்க வேண்டும். என்றார்.
கொழும்­பி­லுள்ள நவ சம சமாஜக் கட்­சியின் காரி­யா­லத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் மேலும் குறி­ப­பி­டு­கையில்,
நாட்டில் இது­வரை காலமும் அரா­ஜக ஆட்­சியே காணப்­பட்டு வந்­தது. ஆயுத களஞ்­சி­ய­சா­லை­களை மறை­வான முறையில் நடத்­தி­வந்­துள்­ளனர். அத­தோடு வௌ்ளை வேன் கடத்­தல்­களும் குறித்த காலப்­ப­கு­தியில் இடம்­பெற்­றன. வௌ்ளை வேன் கடத்­தல்­க­ளுக்­கா­கவே இவ்­வா­றான ஆயுத களஞ்­சி­ய­சாலை நடத்­தப்­பட்­டிக்­காலாம் என தெரி­ய­வ­ரு­கி­றது. எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் மேலும் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதன்­பி­றகு உண்மை நிலை­வரம் நாட்­டிற்கு தெரி­ய­வரும்.
இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் குடும்­பத்தை கூண்­டோடு அழிக்க முனைந்தார். எனினும் அதற்கு இடம் கிடைக்­க­வில்லை. மக்கள் இந்த அரா­ஜக ஆட்­சியை தோற்­க­டித்து விட்­டனர்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியை எவ­ருக்கும் சமப்­ப­டுத்த முடி­யாது. ஜே.ஆர் ஜெய­வர்­தன கூட நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை கொண்டு வந்­தாலும் நாட்டு மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுத்தார். அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­தி­னு­டாக மாகாண சபை முறை­மையை கொண்டு வந்து வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சினை தீர்க்க வழி­வ­கை­களை செய்தார்.
அத்­தோடு இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்கு பிரஜா உரி­மையை வழங்­கினார். இவ்­வா­றான நன்­மை­களை செய்தார். எனினும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இவ்­வா­றான நன்­மைகள் மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை.இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்ளை குறைக்கும் வகையில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்டம் தயார் செய்­யப்­பட்டு வரு­கி­றது.
இதற்கு பல திருத்­தங்கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. உயர் நீதி­மன்­றத்தின் வியாக்­கி­யத்தின் பிர­காரம் மீண்டும் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான திருத்­தங்­க­ளுக்கு 19 ஆவது திருத்­தச்­சட்டம் உட்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் தேர்தல் முறைமை மாற்றம் செய்­யப்­பட்டால் மாத்­தி­ரமே 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்று சுதந்திர கட்சி வீண் கோஷங்களை எழுப்பி வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை தன்னால் முடியாவிடின் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கட்சித் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி பதவியிலிருந்து நீங்க வேண்டும். என்றார்.