Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, April 16, 2015

தனது ஏழு ஏக்கர் காணியை இராணுவம் விடுவிக்க வேண்டும் : தாய் ஒருவர் உண்ணாவிரதம் 
news
logonbanner-1 15 ஏப்ரல் 2015, புதன்
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 
 
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 
 
5 பிள்ளைகளின் தாயாரான திருமதி இந்திரா யோகேந்திரன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.