Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, March 4, 2015

தமிழ் மக்களது நம்பிக்கையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்

Wed, 03/04/2015
Homeஒரு­மித்த நாட்டில் ஒரு நிலைத்த நீடித்து நிற்­கக்­கூ­டிய அர­சியல் தீர்வை வேண்­டியே தமிழ் மக்கள் நீண்­ட­கா­லத்­திற்குப் பின் ஜன­நா­ய­கத்­திற்கு தமது பரி­பூ­ரண ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்கள் எனத் தெரி­வித்­துள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், அந்த ஆத­ரவின் மீது விசு­வா­ச­மு­டை­ய­வர்­க­ளா­கவும் தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்றனர். இந்த மக்களது நம்பிக்கையை அரசாங்கம் கட்டிக்காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் சர்­வா­தி­கார ஆட்சி காணப்­பட்­டா­தாக குறிப்­பிட்­டவர் அந்த நிலை­மையில் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும் எனவும் சுபீட்­ச­மான நல்­லாட்­சிக்­கா­க­வு­மா­கவே தமிழ்­மக்கள் வாக்­க­ளித்­த­தா­கவும் தெரி­வித்தார்.
கிழக்கு மாகா­ணத்­திற்கு நேற்று விஜயம் செய்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் மாகாண அபி­வி­ருத்­திக்­குழுக் கூட்டம் திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,
இந்த நாட்டில் வாழும் சகல மக்­களும் பங்­க­ளிப்புச் செய்­ததன் பேரி­லேயே தாங்கள் அர­சியல் ரீதி­யாக ஒரு ஜனா­தி­ப­தியை தோற்­க­டித்து முதன் முத­லாக ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்­ளீர்கள். முறை­யாக பத­வி­யி­லி­ருந்த ஜனா­தி­ப­தியை தாங்கள் தோற்­க­டித்­தி­ருக்­கின்­றீர்கள்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­களின் கூட்டு ஆத­ரவின் கார­ணத்­தா­லேயே தாங்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளீர்கள். அவ்­வி­த­மா­ன­தொரு தெரிவு உங்­க­ளது பலத்தை அதி­க­ரிக்கச் செய்­தள்­ளது எனக் கரு­து­கின்றேன்.
சமீ­பத்தில் நடந்த சுதந்­திர தின விழாவில் தங்­க­ளது உரை­யின்­போது வடக்­கிலும் தெற்­கிலும் வாழும் மக்­களின் மனங்­களை இணைக்க வேண்டும் எனக் குறிப்­பிட்­டதை நான் மனப்­பூர்­வ­மாக வர­வேற்­கின்றேன். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் சுபீட்­ச­மான நல்­லாட்­சிக்­கா­கவே எமது கட்சி ஆத­ர­வ­ளித்­த­துடன் எமது மக்­களும் தங்­க­ளது வாக்­கு­களை உங்­க­ளுக்கு அளித்­துள்­ளார்கள்.
நீண்ட கால­மாக வடக்கு கிழக்கு மக்கள் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்­க­ளினால் ஒதுக்­கப்­பட்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். கடந்த காலத்தில் சர்­வா­தி­காரம் பின்­பற்­றப்­பட்­டமை அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வி­ருந்­தது. அந்த நிலைமை மாற­வேண்டும். ஒவ்­வொரு துறை­யிலும் மேற்­கொள்­ளப்­படும் கரு­மங்கள் சுதந்­தி­ர­மா­கவும் ஜன­நா­ய­கத்­தன்­மை­யா­கவும் அமை­ய­வேண்டும் என்­ப­தற்­காக ஆத­ரவை வழங்­கி­யுள்ளோம்.
கடந்த காலங்­களில் நீதி­மன்­றங்கள் குறிப்­பாக மேல் நீதி­மன்றம், உச்ச நீதி­மன்றம் போன்­ற­வற்­றுக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை. சர்­வா­தி­கார முறை­யி­னூ­டாக சுதந்­திரம் பறிக்­கப்­பட்­டி­ருந்­தது. மக்கள் ஜன­நா­ய­கத்தை இழந்­தி­ருந்­தார்கள்.
ஜன­நா­யகம் என்­பது பெறு­ம­தி­யா­னது. எல்­லோ­ராலும் எல்லா நிலை­யிலும் மதிக்­கப்­ப­ட­வேண்டும். அப்­போ­துதான் முழு­மை­யான ஆட்­சியைப் பெற­மு­டியும்.ஒரு­மித்த நாட்டில் ஒரு நிலைத்த நீடித்து நிற்­கக்­கூ­டிய அர­சியல் தீர்வை வேண்­டியே தமிழ் மக்கள் நீண்­ட­கா­லத்­திற்குப் பின் ஜன­நா­ய­கத்­திற்கு தமது பரி­பூ­ரண ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்கள். அதில் அதிக விசு­வா­ச­மு­டை­ய­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றார்கள். அவ்­வா­றான விசு­வா­சத்தை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்தும் எதிர்­பார்க்­கின்­றனர்.
திரு­கோ­ண­மலை இந்து மக்கள் அதி­க­மாக வாழும் புனித பூமி­யாகும். இங்கு திருக்­கோ­ணஸ்­வரர் எனப்படும் தட்சின கையிலா பதியும் சக்திமிக்க காளி அம்மன் ஆலமும், வில்லூன்றிகந்தசுவாமி எனப்படும் சிறப்பு மிக்க முருகன் ஆலமும் காணப்படுகின்றன. இவ்வரலாற்று பெருமை மிக்க ஆலயங்களுக்கு அனைத்து மக்களும் இன மொழி மத பேதமின்றி வருகைதந்து வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறிருக்கையில் உங்களுடைய நல்லாட்சிக்கும் எல்லாம் வல்ல மேற்படி தெய்வங்கள் அருள்புரிய வேண்டும் என பிரார்த்திதுக்கொள்கின்றேன் என்றார்.