Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, March 6, 2015

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி

[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 01:10.05 PM GMT ]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு– புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து, பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு முன்னெடுத்திருந்தன.
இதேவேளை ஜெயக்குமாரி தொடர்பாக வழக்கு விசாரணை இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நடைபெற்றது.
எனினும் இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயக்குமாரி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸார்,
நேற்று வியாழக்கிழமை விடுமுறை தினம் என்றதால் நீதிமன்றத்திடம் இருந்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சரியான தகவல் கிடைக்காத காரணத்தினால் அவரை ஆஜர்படுத்த முடியாமல் போனதாக கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயக்குமாரியின் புதல்வியான விபூசிகா தற்போது கிளிநொச்சி மகாதேவா ஆசிரமத்தில் உள்ள நிலையில் அவரது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலரான நளினி இரத்தினராஜா தெரிவிக்கின்றார்.
அத்துடன் ஜெயக்குமாரிக்கு பிணை வழங்க நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் அவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஒருவரும் முன்வராதிருப்பதாவும் அவர் கவலை வெளியிட்டார்.
இதேவேளை  கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுதலை செய்யுங்கள், 'விபூசிகாவின் தாயார் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை இதுவரைக்கும் அரசு ஏன் வெளியிடவில்லை?, குற்றம் செய்யாதவரை கைது செய்துவைத்திருப்பதா நல்லாட்சி?, தாய், தந்தை, உறவினர்களை இழந்து தனியாக வாழும் சிறுமி விபூசிகாவைப் பாதுக்காப்பதற்கு எவரும் இல்லையா?, இதுவா இந்த நாட்டின் சிறுவர் சட்டம்?, யுத்தம் நிறைவடைந்தாலும் மக்களின் மனங்களில் இருந்து யுத்தவடுக்கள் இன்னும் மாறவில்லை போன்ற கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.