Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, March 2, 2015

[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 04:14.57 PM GMT ]
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அத்துடன் கைது செய்யப்பட்ட மகளும் தாயும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் இன்று திங்கட்கிழமை காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் வழமையான சோதனை நடவடிக்கைகள் யாவற்றையும் முடித்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு பிரான்ஸ் நாட்டிற்கு புறப்படத் தயாராகவிருந்த விமானத்தில் ஏறியிருந்த வேளையிலேயே விமானநிலைய அதிகாரிகளால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பகீரதியின் மகள்  பகல்வி(8 வயது) பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவராவார். 
இதேவேளை, இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டு  உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர், இலங்கையில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்திருந்த வேளையில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இவ்வாறு தாயும் மகளும் கைதாகியுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மஹிந்த ஆட்சியின் போது விமான நிலையத்தில் வைத்து தமிழ்ப் பயணிகள் கைது செய்யப்படுவதைப் போன்றே தற்போதைய மைத்திரி சிறிபால சேனவின் ஆட்சியிலும் இக்கைது நடைபெற்றுள்ளதை நோக்குகையில் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சில்  எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லையே என எண்ணத்தோன்றுகிறது? இவ்வாறான நடவடிக்கையில் தற்போதும் கோத்தாவின் அதிகாரங்கள் இலங்கையில் தலைதூக்கியுள்ளனவா என சந்தேகிக்க தோன்றுகிறது?