சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்!
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=358373842329179929#sthash.9QsyQttD.dpuf
நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார்.
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
என்னை வரவேற்றதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிரதமர் டேவிற் கமரூன் வந்தமையினால் நானும் வர விரும்பினேன்.
இங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய சொந்த இடங்களில் பிறக்கவில்லை என்றும் இந்த முகாம்களில் பிறந்துள்ளனர் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
அனைவரும் ஆர்வமாக இருக்கும் தருணத்தில் நான் இலங்கைக்கு 2 ஆவது தடவையாக வந்துள்ளேன். இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற மாற்றத்தோடு உங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
பிரித்தானிய மக்களுடைய விருப்பத்திற்குசார்ப்பான காலணிகள் வழங்குவதில் மகிழ்ச்சி, பாடசாலை, உங்களுடைய ஊருக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத் தாருங்கள்; வலி.வடக்கு மக்கள் கோரிக்கை
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமிற்கு இன்றைய தினம் விஜயம் செய்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடமே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக முகாம்களிலே வாழ்ந்து வருகின்றோம் விரைவில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் என கோரினர்.
இதேவேளை வலி.வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களின் வரைபடத்தையும்பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பார்வையிட்டார்.