மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் எதுவும் கிடையாது: சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்பு
Submitted by Priyatharshan on Tue, 12/30/2014
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ளல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், பொது வேட்பாளருக்கு பரிபூரண ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டார்.