Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, December 7, 2014

[ ஞாயிற்றுக்கிழமை, 07 டிசெம்பர் 2014, 10:16.41 AM GMT ]
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ தேவைகளை, மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வளங்களுடன் மருத்துவர் வரதராஜா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
தற்போது புலம்பெயர் தேசமொன்றில் அடைக்கலமடைந்துள்ள மருத்துவர் வரதராஜா அவர்கள், முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் முழுச்சாட்சியமாக, சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் உள்ளடங்கலாக பல்வேறு தளங்களில் தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் வரதராஜா அவர்களின் பணியினை மதிப்பளிக்கும் பொருட்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மாண்பேற்றலை தனது பாராளுமன்ற அமர்வில் வழங்கியுள்ளது.
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள வழங்கிய பட்டயத்தினை மாண்புடன் ஏற்றுக் கொண்ட மருத்துவர் வரதராஜா அவர்கள், இந்த மதிப்பினை வன்னியில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து மருத்துவபணியாளர்களுடனும் பங்கிட்டுக் கொள்ளவதாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கிலும் பிரான்சிலும் இணைந்ததாக இடம்பெற்று வரும் நா.தமிழீழ அரசாங்கத்தின் மூன்று நாள் அரசவை அமர்வில் இந்நிகழ்வு நெகிழ்வுபூர்வமானதாக அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.