Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, December 5, 2014


[ வெள்ளிக்கிழமை, 05 டிசெம்பர் 2014, 11:59.54 AM GMT ]
தேர்தல் பிரச்சாரத்தின் போது கடவுட்டுக்கள், பொலித்தீன் விளம்பரங்களை தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அதற்கு செலவிடும் பணத்தை சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்கான சிகிச்சைக்கு வழங்கப் போவதாகவும் அறிவி்த்தார் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
இந்நிலையில் நாடெங்கிலும் ஜனாதிபயின் சட்ட விரோதமான கட்டவுட்டுக்கள் காணப்படுவதாகவும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
இதனிடையே நேற்றய தினம் பொதுவேட்பாளரின் பிரச்சாரக் கூட்டம் மாத்தறையில் இடம்பெற்ற நிலையில் அங்கு பல இடங்களில் ஜனாதிபதியின் கட்டவுட்டுடன் பொது வேட்பாளரின் கட்டவுட் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் பொது வேட்பாளருக்கான விளம்பரங்களை அரசாங்கமே செய்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.