Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, November 13, 2014

வட, கிழக்கில் அரசாங்கம் ஒரு வீட்டைக்கூட நிர்மாணிக்கவில்லை; சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டுகின்றார் 

2014-11-13 16:44:03 | General

பா. கிருபாகரன், டிட்டோகுகன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை இழந்த மக்களுக்கு இந்த அரசால் எந்தவொரு வீடும் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதேவேளை 2015 ஆம் ஆண்டுக்குள் மலையக மக்களுக்கு 175000 வீடுகள் கட்டிக் கெடுக்கப்படுமென அரசு அறிவித்துள்ளபோதும் இதுவரை 1319 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 2015 இற்குள் மலையக மக்களின் வீடில்லாப் பிரச்சினை தீர்க்கப்படுமாவென ஐ.தே.க. பிரதித் தலைவரும் எம்.பி.யுமான சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற பொறியியல் நிர்மாணத்துறை, வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார் சஜித் பிரேமதாஸ.