இலங்கை மீது ஏன் அழுத்தங்களை கொடுக்கிறோம் என்பது இப்போது தெரிகிறதா என கிறிஸ் நோனிசிடம் பிரிட்டனின் அமைச்சர் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.

சஜின் வாஸ் குணவர்த்தனாவினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்க்கு பின்னர், கிறிஸ் நோனிஸ், பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
அந்த மாநாட்டின் போது கிறிஸ்நோனிசை சந்தித்த பிரிட்டனின் பொதுநலவாய அமைச்சர் ஹியுகோ சுவைர் கிறிஸ் நாங்கள் ஏன் இலங்கை மீது சர்வதேச ரீதீயாக கடும் அழுத்தங்கை கொடுக்கிறோம் என்பது விளங்;குகின்றதா என பல இலங்கையர்கள் முன்னிலையில் கேட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் நொனிசின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த போதிலும் அவர் பதில் எதனையும் தெரிவிக்காமல் வெளியயேறிவிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
