ஐ. நா குழு வடக்கு விஜயம்;அபிவிருத்தி குறித்தும் கேட்டறிந்தனர்

28 அக்டோபர் 2014, செவ்வாய்
ஐ.நா குழு ஒன்று இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்று இன்று மேற்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களையும் சந்தித்து அபிவிருத்தி குறித்து கலந்துரையாடிருந்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=143123591629707855#sthash.gHWxxoH1.dpuf


ஐ.நா குழு ஒன்று இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்று இன்று மேற்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களையும் சந்தித்து அபிவிருத்தி குறித்து கலந்துரையாடிருந்தனர்.
இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் போல் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் காலை 11.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லை மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி குறித்துக் கேட்டறிந்து கொண்டனர். மேலும் புகையிரத சேவை ஆரம்பிப்பு , பாதுகாப்பு , சமூக மேம்பாடு தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

இது குறித்து யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில்,
ஐ.நா குழுவினர் மாவட்ட செயலகத்தில் எம்மைச்சந்தித்து யுத்தம் நடைபெற்று பாரிய அழிவுகளை எதிர் கொண்ட மாவட்டங்களாக இருந்தன. எனவே தற்போதுள்ள நிலை எவ்வாறு என கேட்டறிந்தனர். நாம் சமூக மேம்பாடு, அபிவிருத்தியின் வளர்ச்சிப் போக்கு மக்களது ஒருங்கிணைப்பு தொடர்பிலும் விரிவாக விளக்கமளித்திருந்தோம் என்றார்.
மேலும் குறித்த குழுவினர் அரச அதிபர்களுடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விஜயம் மேற்கொண்ட குழு வடக்கு ஆளுநர் ஜீ.ஏ சந்தரசிறியை சந்தித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
