Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, October 6, 2014

றோலர் மீன்பிடியை அனுமதியுங்கள்; வல்வெட்டித்துறை மீனவர்கள் போராட்டம் 


news
logonbanner-106 அக்டோபர் 2014, திங்கள்
இழுவைப்படகு மீன்பிடி முறையினை அனுமதிக்கக் கோரி வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வல்வெட்டித்துறை தேவடி கடற்கரைப்பகுதியில் ஒரு நாள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மீண்டும் குறித்த மீன்பிடி முறையினை அனுமதிக்குமாறு கோரியுமே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய உணவு தவிர்ப்புப் போராட்டம் மாலை 5 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது.



போராட்டத்தில் அடிக்காதே அடிக்காதே எங்களின் வயிற்றில் அடிக்காதே, தென்னிலங்கையில் ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? இழுவைப்படகின் அனுமதி வேண்டும், மாகாண சபையே எங்கள் நிலையறிந்து நீதிதாருங்கள், வழி விடு வழிவிடு மாகாணசபையே விடைகொடு போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது வீட்டு வறுமையால் பாடசாலை செல்லும் மாணவர்களும்  பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டும் முகமாக பாடசாலை சீருடையணிந்து மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=825333517406296428#sthash.OKswyJ8p.dpuf