தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய உங்கள் நிலைப்பாடு பற்றி . நீங்கள் கூறவேண்டும். நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது
-சோபித தேரரிடம் கலாநிதி.என்.குமரகுருபரன் வலியுறுத்து
.தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றியே நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் மக்களாணையை வெற்றிகொள்ளமுடியும்- மாதுலுவாவே சோபித தேரர்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எனும் அமைப்பின் கீழ் கோட்டே நாக விஹார விகாரையில் பல் வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்துவரும் மாதுலுவாவே சோபித தேரர் இன்று திங்கள் 29/09/2014 காலை ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன்,மற்றும் லிபரல் கட்சி செயாலாளர் கமல் நிஸ்ஸங்க ,புதிய ஜனநாயக கட்சி லலித் முன்னணி செயலாளர்கள் ஷியாமலீ பெரேரா மற்றும் ஷலிலா முனசிங்க்ஹ ஆகியோரை சந்திப்பிற்ற்கு அழைத்திருந்தார் . இங்குபேசிய பலரும் சோபித தேரர் தான் பொதுவேட்பாளராக முடியும் .யு என் பி தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்டது .காலத்தைக் கடத்தாது செயற்பாட்டில் இறங்க வேண்டும், என்பதை வலியுறுத்தினர் .
ஆனால் கலாநிதி குமரகுருபரன் தனது கருத்து சற்று வேறுபட்டது எனவும்
ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக மட்டும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது.ஆனால் தேசிய ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் மக்கள் கட்டாயம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தவறமாட்டார்கள்
இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய உங்கள் நிலைப்பாடு பற்றிநீங்கள் கூறவேண்டும் மாறாக அரசியல் தீர்வுட்பட்ட பல பிரச்சனைகளுக்கு தமிழினம் முகம் கொடுக்கின்றது.என குமரகுருபரன் வலியுறுத்தினார் .