Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, October 29, 2014

வெள்ளத்தில் மிதக்கும் கோணப்புலம் நலன்புரி முகாம் 
news
logonbanner-128 அக்டோபர் 2014, செவ்வாய்
மழை காலம் ஆரம்பித்துள்ளதால் வலிவடக்கு பிரதேசசபை எல்லைகுற்பட்ட மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாம்  வெள்ளத்தில் மிதக்கின்றது.
                                            


கடந்த 25 வருடங்களிற்கு மேலாக தமது சொந்த நிலங்களை இழந்து குறித்த நலன்புரி முகாம்களில் வசிக்கும் இவர்கள் தமக்கு அனர்த்த நிவாரணங்கள் எதுவும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் அமைத்து தரப்பட்ட கிணறுகள் மற்றும் மலசலகூடங்கள் ஒழுங்கான முறையில் இல்லையெனவும்,  தெரிவித்தனர்.

இது தொடர்பில் வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தனிடம் ஒன்லைன் உதயன் வினவிய போது :-

குறித்த நலன்புரி நிலையத்தின் அனர்த்த பாதிப்புகள் தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.