Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, October 6, 2014

ஜெயக்குமாரியின் விடுதலையை கோரி ஆர்ப்பாட்டம் 
news
logonbanner-1 அக்டோபர் 2014, திங்கள்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் விடுதலை மற்றும் விசாரணைகள் இன்றி பல ஆண்டுகளாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 திகதி காலை 09.30 மணியளவில் இடம் பெறவுள்ளது. 
 
குறித்த போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரான கி.தேவராசா கருத்து தெரிவிக்கையில்,
 
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் வசித்து வந்த ஜெயக்குமாரி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமாரிக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு உண்டு என கூறி இராணுவத்தினரால் கைது செய்பட்ட ஜெயக்குமாரி 200 நாட்களுக்கு மேலான நிலையில் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
 
இவரை நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதற்கும் மற்றும் நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன் கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து மக்கள் தமது துக்கத்தை வெளிபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.
 
வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரஜைகள் குழுக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.