Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, October 16, 2014

மீராபாரதி-15.10.2014
கனடாவில் ரொன்ரொடோ நகரில் சமவுரிமை இயக்கத்தின் முக்கியஸ்தவர்களும் முன்னிலை சோசலிக் கட்சியின் தலைவர்களும் பங்குபற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு வழமையாக வருகின்றவர்களே வந்திருந்தார்கள். அதிலும் வழமையாக வருகின்ற முக்கியமான சிலரைக் காணமுடியவில்லை. “சமவுரிமைக்கான இயக்கம் எனக் கூறப்பட்டபோதும் ரொரன்டோவில் வாழ்கின்ற சிங்கள முஸ்லிம் நண்பர்களைக் காணமுடியவில்லை. மாறாக கருத்துரை வழங்குவோராக சிங்களவர்களும் தமிழர்களும் இருந்தனர். கேட்போராக தமிழர்கள் மட்டுமே இருந்தனர்” என ஒருவர் குறிப்பிட்டார். ஆகவே இக் கூட்டமே இவர்களது அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது.