Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, September 1, 2014

பாடசாலை அதிபர்களிடம் ரி.ஐ.டி விசாரணை 
news
logonbanner-1 31 ஆகஸ்ட்டு 2014, ஞாயிறு
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் மூவர் நேற்றைய தினம் கந்தசாமி ஆலயதிற்கு அருகில் உள்ள பயங்கரவத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
 
 
கிளிநொச்சிப் பகுதியிலுள்ள பாடசாலைகளின் முகவரிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட உயிர்ப்பதிவு என்னும் புத்தகம் தொடர்பிலேயே மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
 
குறித்த புத்தகம் கத்தோலிக்க மதகுரு ஒருவரினால் அச்சிட்டு வெளியிடப்பட்டதாகவும், இதன் பிரதியினை பாடசாலைகள் விடுமுறை என்பதால் தாங்கள் இன்னும் படிக்கவில்லை எனவும் கூறிய அதிபர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அதிபர்களை உடன் விடுவித்தனர்.
 
 
குறித்த புத்தகம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான தகவல்களை தாங்கி வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதேவேளை ஏனைய பாடசாலை அதிபர்களும் பயங்கரவத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=754313380501618403#sthash.tHPVaNBx.dpuf