Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, August 21, 2014

ஐ.நா விசாரணைகளை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி – பாக்கியசோதி சரவணமுத்து:-


ஐ.நா விசாரணைகளை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி – பாக்கியசோதி சரவணமுத்து:-
21 ஆகஸ்ட் 2014
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ஐக்கிய விசாரணைகள் குழுவிற்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வீசா மறுப்பதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விசாரணைகளை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக பாக்கியசோதி சரவணமுத்து சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான சாட்சியங்கள் நாட்டுக்கு வெளியே பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் நோக்கிலேயே இவ்வாறு விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அறிவித்துள்ளார்.