Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, August 30, 2014

புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது கூட்டுப்பிரார்த்தனை 
news
logonbanner-128 ஆகஸ்ட்டு 2014, வியாழன்
வலி. வடக்கு மீள்குடியேற்றதை வலியுறுத்தி நாளை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டுப்பிரார்த்தனை புலனாய்வு பிரிவினரின்  அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

பூந்தளிர்  மாவட்ட  பெண்கள் அமைப்பின் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கூட்டுப்பிரார்த்தனைக்கு   சிவில் உடை அணிந்த இராணுவ புலனாய்வாளர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

மேலும் தெரிய வருவதாவது,

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர வேண்டும் என வேண்டி, பூந்தளிர் மகளிர் அமைப்பின் யாழ். மாவட்டக் கிளையினர் நாளை சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் உள்ள ஆலயத்தில் மாலை 3 மணியளவில் தீப ஆராதனை நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபையினர் மக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அத்துடன் நாளைக் காலை 11 மணிக்கு யாழ். மாவட்ட அரச அதிபருக்கு ஒரு மகஜர் வழங்கவும் ஏற்பாட்டளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த சபாபதி நலன்புரி நிலைய வாசி ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிவில் உடையில் அங்கு வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அவருடன் இணைந்து ஏற்பட்டாளர்களைச் சந்தித்து  பலாலி படைத்தலைமையைகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே நாம் வந்துள்ளோம்.

எந்தவொரு செயற்பாடும் இங்கு  மேற்கொள்ள கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.  அப்போது அரசுக்கு எதிரான எந்த நிகழ்வுகளையும் நடத்தவில்லை இது எமது சமய  நம்பிக்கை என ஏற்பாட்டாளர்களும் அங்குள்ளவர்களும் தெரிவித்தனர்.

எனினும் அவர்களது அச்சுறுத்தல் பலமாகியதனால் இந்தநிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிபருக்கான மகஜர் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ் அமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=621743375130803581#sthash.3oANo9eC.dpuf