Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, August 23, 2014

13வது சட்டத்திருத்தத்தின்படி தமிழர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை தமிழ் எம்.பி.க்களிடம் மோடி உறுதி
Posted Date : 10:34 (23/08/2014)Last updated : 16:41 (23/08/2014)
புதுடெல்லி: இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டதிருத்தத்தின்படி, தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
 
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசினர்.

பின்னர் இச்சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் கவுரவத்துடனும், சிங்களர்களுக்கு சமமாகவும், நீதியுடனும், சுயமரியாதையுடனும் வாழ அரசியல் தீர்வு தேவை என்பதை பிரதமர் தன்னை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்களிடம் வலியுறுத்தினார்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது சட்டதிருத்தத்தின்படி, தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மறுசீரமைப்பு, வீடு கட்டுதல், கல்வி, மருத்துவமனைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா உதவி புரியும்" என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் 6 பேர் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.