Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, August 6, 2014

[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 11:40.30 AM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் பயின்று வந்த யோகராஜா நிரோஷன் மற்றும் அதே ஆண்டில் பயிலும் மற்றுமொரு தமிழ் மாணவன் நேற்று பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் இருவரும் நேற்று முற்பகல் 11 மணி மற்றும் 12 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்து வைத்திருந்ததாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடத்தப்பட்ட மாணவர்களின் அடையாள அட்டைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தனது பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது.
இதன் பின்னர் நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்தும் மேற்படி இரு மாணவர்களும் சமனல கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து சமனலகந்த பொலிஸார் தகவல் கேட்ட போது அது பற்றி கேட்க வேண்டாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சங்கத்தின் உறுப்பினர்கள் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் பற்றி விசாரித்த போது, அவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி அறிவிக்கவில்லை என்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் யாழ். முகமாலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு தமிழ் மாணவர் அண்மையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்த போது தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.