Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, August 3, 2014

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே-மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை:-

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக் குறியே - மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை:-
ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும் ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் என நீண்டகாலமாக இருந்துவரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உண்மைகள் வெளி வந்து விடும் எனும் அச்சத்தினாலேயே அரச கையாட்கள் இவ்வாறான தீய காரியங்களை மேற்கொள்கின்றனர் என மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் நாழிதலான  புதியவன் தனது 150 ஆவது இதழை நேற்று(2) சனிக்கிழமை வைபவ ரீதியாக வெளியிட்டு மகிழ்ச்சி கண்டுள்ளது.

புதியவனின் துணை ஆசிரியர் மக்கள் காதர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக  மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.