இலங்கை தீவில் மதச் சிறுபான்மை மக்கள் குழுவில் ஒருசாராரான இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் மிகக் கொடூரமான சிங்கள பௌத்த பேரினவாதிகளினதும் அவர்களுக்கு துணை நிற்கும் ஸ்ரீலங்கா அரசினதும் அநீதிகளிற்கு எதிர்ப்புத்தெரிவித்து எழுச்சி மிக்க கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று ஸ்கார்புரோ நகரில் Markham Road and Sheppard Avenue சந்திப்பில் மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
எம் சகோதரர்களான இஸ்லாமிய சகோதரர்களுக்கு நடக்கும் அநீதிகளை கனடியத் தமிழர்களான நாம் வன்மையாக கண்டிப்பது தமிழர்களாக எமது கடன் என்பதை உணர்ந்த மாந்தர்களாக கனடா வாழ் தமிழர்கள் பல்வேறு தேச இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதுவரை காலமும் பிரிந்து கிடக்கும் பல்வேறு கனடா வாழ் தமிழீழ உறவுகளும் ஒன்றிணைந்து ஒரு நன்மைக்காக கரம் கோர்த்து போராடிய காட்சி காண மகிழ்ச்சியாக இருந்தது. தமிழர்களின் ஒற்றுமை இலங்கை தீவின் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை இன்னமும் ஒடுக்கப்படும் மாந்தர்களின் ஒற்றுமை மென் மேலும் வலுவாக வேண்டும்.