முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு முன் ஆயுதப் பயிற்சியில் பிக்குகளின் திடுக்கிடும் காட்சிகள்
June 25, 2014
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி தெரிவித்தார்.
மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப் பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாhரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
