தன்னுடைய மோசமான தவறுகளுக்காக இந்தக் கடைசிக் கட்டத்தில் அரசு இந்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருவது விந்தையானது. இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழம நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு:-
இங்கு விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மற்றும் அது சம்பந்தமான பொது விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக நான் இங்கு இந்தக் கூற்றை வெளியிடுகின்றேன். தன்னுடைய மோசமான தவறுகளுக்காக இந்தக் கடைசிக் கட்டத்தில் அரசு இந்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருவது விந்தையானது.
