Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, June 2, 2014

மயானத்திலுள்ள தமிழர்களின் 


சமாதிகள் சேதம்



-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, அன்புவழிபுரம் பொது மயான சமாதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்களடங்கிய கல்வெட்டுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த கல்வெட்டுக்களிலுள்ள பெயர்கள், விரங்கள், மற்றும் புகைப்படங்கள் என்பவையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து, திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் ஆகியோர் சனிக்கிழமையன்று (31) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.