Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, May 2, 2014

சாவகச்சேரி மேதின உரையின் பின் சி.வி. விக்கினேஸ்வரன் பொலிசாரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்-

முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் சர்ச்சையை ஏற்படுத்திய மேதின உரை-

GTMN01 மே 2014
வடமாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ்வரனை  கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். 

சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அவசர அவசரமாக காரில் ஏற்றி அவரை வெளியேற்றினர்.

இதனிடையே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உரை அங்கு பிரச்சன்னமாகியிருந்த பலரிடமும்  சர்ச்சையை  ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாவகச்சேரியில் மேதின ஏற்பாட்டை செய்திருந்த மாகாணசபை உறுப்பினர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை சுற்றிவளைத்து பலரும் கேள்விகளை எழுப்பியதுடன் விமர்சனங்களையும் முன்வைத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.