விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்போர் நான்காம் மாடிக்கு செல்வர்?!
There cannot be any minorities in the country – MR-President Mahinda Rajapaksa has said that there cannot be any minorities in the country and that it was his policy.-He has noted that it was his policy that is enshrined in the Mahinda Chinthana.
07/04/2014
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல் வெளியிடுகையில்,

விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கும் எவரேனும், சமர்ப்பிக்கும் சான்றுகள் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக இருந்தால், நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.
அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாதென்று சிறிலங்கா உறுதியாக அறிவித்து விட்டது.
எந்வொரு விவகாரமும் உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும் என்று அண்மையில் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியிருந்தது.
அனைத்துலக விசாரணைக்கு நாம் அனுமதி அளித்தால், அது நாட்டின் இறைமைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஐ.நா விசாரணைக் குழு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாட்சியமளிக்க முடியாது. ஏனென்றால், அவர்கள், நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக உறுதிப்பிரமாணம் எடுத்த பின்னரே, பதவியேற்றுள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அனைத்துலக விசாரணைக் குழு முன்பாக, சாட்சியமளிப்பது தேசத்துரோகம் என்றும், அவ்வாறு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக அரசாங்க இரகசிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்படுபவர்கள் நான்காம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.