Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, April 29, 2014

2014-04-26 22:30:13 | General
யாழ்நகர் நிருபர்

தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் ஆரம்பிபக்கப்பட்டள்ள பேச்சுவார்த்தையை குழப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமே மேற்கொண்டள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வபேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனைகளில் தலையிட்டுவந்தவெள்ளைக்காரர்களைப் பார்த்துவெள்ளைப் புலிகள் என்று கூறியவர்கள் தற்போது  தலையிட்டுள்ள கறுப்பர்களைப் பார்த்து கறுப்புப் புலிகள் என்றும் கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வரவேண்டுமென்ற கோரிக்கையை ஜனதபதி மீண்டும் முன்வைத்திருக்கின்றமை தொடர்பில் கருத்துவெயிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து தெரிவிக்கையில்;
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டு அதில் கூட்டமைப்பினர் உட்பட அனைவரும் கலந்துகொள்ளவெண்டுமென்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் இந்தப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவென்பது பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான அரங்கமல்ல. அவ்வாறு இருப்பதாக இருந்தால் தமிழர் தரப்பிற்கும் அரசதரப்பிற்கும் இடையில் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள்  நடந்து அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை இந்த குழுவிற்கு சம்ர்ப்பிக்கலாம் என்று கூட்டமைப்பினராகிய நாம் கூறியிருந்தோம்.

ஆனாலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இந்நிலையில் பலமுறை தொடர்ந்தும் அழைத்திருந்த போதும் நாம் எமது நியாயமான கோரிக்கைகளையே மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வந்திருக்கின்றோம். இந்நிலையில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பலநாட்டுத் தலைவர்களும் வருகைதந்திருந்ததுபோன்று தென்னாபிரிக்காவின்  ஜனாதிபதியும் வருகைதந்திருந்தார்.

இதன்போது இங்குள்ள இனப்பிரச்சினைத் தீர்விற்குதென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பும் மத்தியஸ்தமும் அவசியமென்றும் உதவவேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய தென்னாபிரிக்க ஜனாதிபதியின்  பிரதிநிதி ஒருவர் மூலமாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசதரப்பு பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

அத்தோடு எதிர்வரும் ஜூன்  மாதமளவில் இங்கு வந்துநி லைமைகளைப் பார்வையிடவுள்ளதுடன்  அரசதரப்புமற்றும்  தமிழ்த் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைநடத்துப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையைக் குழப்பும் வகையில் அரசாங்கம் தற்போது தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப்பற்றி பேசுகின்றனர். இவ்வாறு தற்போது பேசுவதானது அரசதரப்பினாலேயே வரவழைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க பேச்சுவார்த்தயை மீண்டும் குழப்புவதற்கு முயல்வதாகவே அமைகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி மகிந்தராஐபக்ஷ அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினரும்  அரசின் பிரதிநிதியுமான நிமால் சிறிபாலடிசில்வா மற்றும் அரசினால் வளர்க்கப்படும் இனவாதக் குழுக்களான பொதுபலசேனாக்களும் தெரிவுக்குழு பற்றியே தற்போதே பேசுகின்றனர்.
இங்கு இவ்வளவு காலமும் வெள்ளையர்களைப் பார்த்துபுலிகள் என்று கூறியவர்கள் இப்போது கறுப்பர்களைப் பாரத்தும் கறுப்புப் புலிகள் என்றும் கூறுவார்கள். இந்தப்  பேச்சுவார்த்தையை குழப்வதற்கான முழு நடவடிக்கையையும் அரசாங்கமே மேற்கொண்டுள்ளது.

ஆகவே இதற்கான முழுப் பொறுப்பையும் அவர்கள்தான்  ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.