தண்டனை விதிக்கப்பட வேண்டும் இலங்கையின் குற்றச் செயல்களுக்கு- பான் கீ மூன்

02 ஏப்ரல் 2014, புதன்

இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
Posted Date : 09:12 (02/04/2014)
கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு, இலங்கைக்கு வர அனுமதியளிக்கப் போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளை, நிபுணர் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடக்கு, கிழக்கிற்கு சென்று சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு நிபுணர் குழு கோரியுள்ளது.
இலங்கையை போர்க் குற்றவாளிகளாக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எனவே, நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு குறித்த நிபுணர் குழு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
.jpg)