ஒட்டுசுட்டானில் இளைஞர்கள் கைது : தேடப்படுவோர் பற்றிய சுவரொட்டிகளை அகற்றினராம்

25 மார்ச் 2014, செவ்வாய்
இராணுவத்தினரால் தேடப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான சுவரொட்டிகளை அகற்றிய குற்றச்சாட்டில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞர்கள் மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தருமபுரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடுப்படுகின்றவர்கள் தொடர்பாக வட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிலவற்றை குறிப்பிட்ட சில பகுதிகளில் மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவமும் பொலிசாரும் கூழாமுறிப்புக் கிராமத்தினைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கூழாமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான அகஸ்டின் சலூஜன் (வயது 24), இராசேந்திரம் கமலதாஸ் (வயது 19), சுரேஷன் (வயது 25), நஜீதரன் (வயது 25) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற உறவினர்கள் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு கோரியபோது, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்றும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே விடுதலை செய்யமுடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இளைஞர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கந்தனாலயன் என்றழைக்கப்படும் மாணிக்க காந்தன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை அரசு தீவிரப்படுத்தியுள்ளதுடன் குறிப்பாக இளைஞர்களின் நடவடிக்கையினை கண்காணிக்கும் பதிவு நடவடிக்கையில் படையினர் மற்றும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.