சீ.வி.விக்கினேஸ்வரனை விஜயலக்சுமி உயர் நீதி மன்றுக்கு இழுத்துள்ளார்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
விஜயலக்சுமியின் வழக்கு பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் விக்கி:-
19 மார்ச் 2014

இந்த தகவலை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனே வெளிப்படுத்தியுமுள்ளார். வடக்கிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது முதலமைச்சர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அதிகாரங்களை வட மாகாண முதலமைச்சர் குறைத்து விட்டதாகவும் தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டதால் மாகாண சபையில் உண்மையான தனது உரிமைகளை இழந்துள்ளதாகவும் பிரதம செயலாளர் வழக்கு பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவ்வாறு அவர் வழக்கு பதிவு செய்துள்ளதும் தனக்கு ஒரு வகையில் நன்மைதான் என தெரிவித்தார்.
இவ்வாறு பிரதம செயலாளரைப் போன்று மாகாணசபைக்கு எதிராக செயற்படுபவர்களால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய அசாத்தியங்கள் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வழக்கானது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் எவை என்பதை நீதிமன்றத்தினூடாக அனைவரும் அறிவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை:-
19 மார்ச் 2014

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று (19.03.14) விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.