Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, March 1, 2014

மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
news
logonbanner-1
26 பெப்ரவரி 2014, புதன்
நாவலர் வீதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.நகரின் நாவலர் வீதியிலுள்ள கட்டிடத்திலிருந்து குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த கணேஸ் ருக்‌ஷன்(வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இது கொலையாக இருக்கலாம்  என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டு இங்கிருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
தனது சக பணியாளர்கள் 9 பேருடன் உயிரிழந்த நபரும் குறித்த கட்டடத்தில் வசித்து வந்திருந்ததாகவும் நேற்றிரவு அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் இதனால் எழுந்த மோதலே கொலையில் முடிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=518722681827134780#sthash.iqgxTpiM.dpuf