சுற்றிவளைப்புக்குள் சுதந்திரபுரம்; பலர் கைது வன்னியில் தொடரும் பதற்றம்
நேற்று இரவு முதல் சுதந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர்அதிலிருந்து 8 பேரை மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை 300க்கும் அதிகமான இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று இரவும் சோதனை நடவடிக்கைகளும் ,கைதுகளும் தொடருமோ என பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கும் பரவியது படைத்தரப்பின் கெடுபிடி
நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன.சைக்கிள்களிலும், கால்நடையாகவும் மாத்திரமன்றி சில இடங்களில் இராணுவ ஜீப்களிலும் படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் இரவு நேரத்தில் வீதிகளில் பயணிப்போரை மறித்து அடையாள அட்டைகளையும் பரிசீலித்தனர். வாகனங்கள் தொடர்பான விபரங்களும் படையினரால் பதியப்பட்டன. இதனால் வன்னியில் நிலவிய பதற்றமான -போர்க்காலம் போன்ற சூழல்- நிலைமை யாழ்ப்பாணத்திலும் பரவி, தொடரப்போகின்றதோ எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வன்னியில் நேற்றும் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.பல பகுதிகளில் படையினர் வீடு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களின் அடையாள அட்டைகளைச் சோதனை செய்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=277242768622457964#sthash.geBFMfej.dpuf

20 மார்ச் 2014, வியாழன்
புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து பெரும்தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளதாக பிரதேச பொதுமக்கள் உதயன் ஒன்லைனிடம் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு முதல் சுதந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர்அதிலிருந்து 8 பேரை மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை 300க்கும் அதிகமான இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்று இரவும் சோதனை நடவடிக்கைகளும் ,கைதுகளும் தொடருமோ என பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

22 மார்ச் 2014, சனி
கடந்த சில நாள்களாக வன்னியில் நிலவிய இராணுவச்சோதனைகள் நேற்று முதல் யாழ்ப்பாணத்துக்கும் பரவின.நேற்றிரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன.சைக்கிள்களிலும், கால்நடையாகவும் மாத்திரமன்றி சில இடங்களில் இராணுவ ஜீப்களிலும் படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.