Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, March 20, 2014

புதுகுடியிருப்பில் காணிகளைப் பறிக்கும் உத்தியோகத்தர்கள்

news
logonbanner-1
19 மார்ச் 2014, புதன்
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட  காணிகளை   காணி உத்தியோகத்தர்கள் பறிமுதல் செய்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.புதுக்குடியிருப்பு இடைக்கட்டுப் பகுதியில் பலவருடங்களாக வசித்து வரும் மக்களின் காணிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்படுகின்றன என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் போருக்கு முன்னரும் அதற்கு பின்னரும் குறித்த இடத்திலேயே வசித்து வருகின்றனர். தற்போது தமக்கு வேண்டிய சிலரை  அங்கு குடியேற்றுவதற்காக அடாவடித்தனமான செயற்பாடுகளில் காணி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 “ இந்தக்காணிகள் உங்களுக்குச் சொந்தமானவை அல்ல” என்று  தெரிவிப்பதுடன் போலி உறுதிகளை காண்பித்து , தம்மைக் காணியை விட்டு வெளியேறுமாறு  குறித்த உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருவதாக  பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த அடாவடிச் செயலுக்கு அந்தப்பகுதியின் கிராம சேவகரும்  மற்றும் அரச அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம்  பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=399452759119807313#sthash.BaEDDJNM.Osi1m8kq.dpuf