[ புதன்கிழமை, 19 மார்ச் 2014, 09:35.14 AM GMT ]


400 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட அந்த பகுதியில் விமான ஓடு பாதை ஒன்றை அமெரிக்கா நிர்மாணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன போக்குவரத்து வசதிகளுக்காக அமைப்பதாக கூறி மூன்று கிலோ மீற்றர் நீளத்தில் பாரியளவில் அகலமாக வீதி ஒன்றை அமெரிக்கா நிர்மாணித்துள்ளது.
5 அடிக்கும் மேல் கெங்ரீட் இட்டு அதற்கு மேல் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண வீதிகளை விட சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீதியில் பெரிய விமானங்களையும் இறக்க முடியும் என தெரியவருகிறது.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கூட செல்ல முடியாத வகையில் தூதரக சிறப்புரிமையின் கீழ் நடத்தப்பட்டு இரணைவில் அமெரிக்க குரல் நிலையத்திற்கு பொறுப்பாக மூன்று அமெரிக்க பிரஜைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வானொலி சிற்றலை வரிசைகளை ஒலிபரப்ப இந்த இடம் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கூறிய போதிலும், அதனை மீறி அங்கு வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய நாடுகள் பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்திருந்தன.