Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, February 12, 2014

காணாமற்போனோர் ஆணைக்குழு அரசின் கண் துடைப்பு நடவடிக்கைஜப்பான் அதிகாரியிடம் கூறினார் மாகாண சபை உறுப்பினர் 

news
logonbanner-1
11 பெப்ரவரி 2014, செவ்வாய்

போரின்போது  சரணடைந்தவர்கள், காணாமல்போனவர்களின் விபரங்கள் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. காணாமற் போனோர் தொடர்பில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அரசின் வெறும் கண்துடைப்பு என்று வடக்கு மாகாண சபை பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன் ஜப்பானியத் தூத ராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரியிடம் சுட்டிக்காட்டினார்.

ஜப்பானியத் தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி நவொகொ குராமொச்சி  அண்மையில்  முல்லைத்தீவுக்குப் பயணம் செய்தார். இதன்போது அவர் வடக்கு மாகாண சபைப் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெக நாதனைச் சந்தித்து கலந்துரை யாடினார்.

இதன்போது அவர் ஜப்பான் அதிகாரியிடம் தெரிவித்ததாவது:
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற போர் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமி ழின அழிப்பின் செயற்பாடாகும்.

வன்னியில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றவேளை பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதற்குள் வலுக்கட்டாயமாகத் தமிழ்மக்களை இழுத்து எந்தவித பாராபட்சமும் காட்டாது குண்டு போட்டு அழித்தது அரசு.

காயப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்குக்குக் கூடப் போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.இதனால் எத்தனையோ தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள்.

இதனைத்தான் இந்த அரசு மனிதாபிமான நடவடிக்கை என்று உலக நாடுகளுக்குப் பறை சாற்றுகின்றது. போர்ச்சூழலில் அகப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்காமல் வெறுமனே 1000 பேருக்கு உணவு கொடுத்துவிட்டு அனைவருக்கும் போதியளவு உணவு கொடுத்திருக்கின்றோம் என்று சர்வதேசத்தை முழுக்கமுழுக்க ஏமாற்றியது அரசு.இப்போதும் இதனைத்தான் செய்கிறது.

போரின்போது சரணடைந்தவர்கள், காணாமற்போனவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை. கண்துடைப்புக்காக அரசால் நிறுவப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழு இதுவரை செய்தது என்ன?

இந்த நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டும் கொலை  செய்யப்பட்டும் தண்டிக்கப்பட்டும் வருகின்றார்கள்.

மக்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய விடாமல் முடக்குகிறது அரசு என்று கூறினார்.             
‘Government commission is a fake’ NPC Deputy Chairman tells Japan

12 February 2014
Antony Jeganathan, Deputy Chairman of the Northern Provincial Council and Tamil National Alliance (TNA) Councillor, has slammed the Sri Lankan government’s commission on disappearances as a fake, set up only to fool the international community, in a meeting with officials from the Japanese embassy.

According to a report in the Uthayan, Jeganathan met with the embassy’s political affairs officer who was on a recent visit to Mullaithivu, and told him that no information on the thousands of people who remain missing or disappeared has been released.

The Deputy Chairman also told the Japanese of the brutality of the ‘No Fire Zones’, set up as the Sri Lankan Army shelled the Vanni 5 years ago. He stated that Tamils were deliberately shelled once moved into the ‘No Fire Zones’ and that this massacre was planned by the Sri Lankan government.
Also see our earlier posts:

Another commission... (26 July 2013)