உதயன் செய்தியாளர் மீது நேற்று திடீர்த் தாக்குதல்

உதயன் பத்திரிகையின் வன்னிப் பிராந்தியச் செய்தியாளர் ந.கிருஸ்ணகுமார் நேற்று மாலை 5.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து மூவரால் மோசமாகத் தாக்கப்பட்டார். தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=795092528422812578#sthash.N5cyEip0.dpuf
Uthayan journalist attacked

22 December 2013
A journalist for the Jaffna based newspaper, Uthayan, was attacked by his home in Vanni on Saturday, reported the paper.
The journalist, N. Kirushnakumar, was attacked by three men who arrived by motorbike to his house. He has been admitted to a hospital in Kilinochchi with head injuries.
One of the three was caught and handed over to the police, whilst the others escaped. According to the paper, the attacker who was caught, identified himself as Nathan, and alleged he was a supporter of a "political party". Further details are unknown.

உதயன் பத்திரிகையின் வன்னிப் பிராந்தியச் செய்தியாளர் ந.கிருஸ்ணகுமார் நேற்று மாலை 5.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து மூவரால் மோசமாகத் தாக்கப்பட்டார். தலையில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செய்தியாளரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் செய்தியாளரை வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வாசலுக்கு வந்ததும் அவர் மீது கொட்டன்களால் சரமாரியாகத் தாக்கினர். செய்தியாளர் குக்கூரலிட்டு கத்தினார்.
தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோட முற்படுகையில் அயலவர்களால் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மற்றையவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் நாதன் என்று அவரும் செய்தியாளரின் ஊரை சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினரது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான இவர் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணி குறித்தும் தாக்குதலின் பின்னால் உள்ள அரசியல் தொடர்பு குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.