| யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு |
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தினர்.
கடந்தாண்டு மாவீரர் தினத்தின் பின்னர் பல்கலைக்கழகம் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியாகவும், நம்பகமான மாணவர்களையும், பேராசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்டு இந்த நினைவு நாள் நடைபெற்றுள்ளது.
இதேவேளை பல்கலை வளாகத்தில் அமைந்துக்கள் ஆலயத்தின் உள்ளே இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் அதற்கு நிர்வாகத்தினர் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் ஆலயத்திம் முன் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
|
Mullivaikkaal
By Mahesan Niranjan -May 18, 2013
this eighteenth of May.
Between Devils and deep sea yonder,
men, women and children
hiding three feet under.
Comforting in embrace,
then the blasting of a grenade.
Screams of agony,
then silence so deadly.
From those bunkers they lay,
makes this atheist pray.
With the end of the Fascist,
the new dawn we toasted;
With strength of Leadership,
of a new plan we boasted.
Now what can we show,
for all that gore?
Pretty lovers’ benches
on Diyawanna shore.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:38.48 AM GMT ]
2009ம் ஆண்டு மே மாதம் மனித நேய நடவடிக்கை என்ற பெயரால் இலங்கை அரசாங்கத்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் இறந்துபோன ஆன்மாக்களின் ஈடேற்றம் வேண்டி இன்று காலை 8 மணிக்கு சைவ ஆராதனை நிகழ்வும் கிறிஸ்தவ ஆராதனை நிகழ்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அவர்களுடன், தமிழரசுக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு. பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நா.வை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மா. சுகந்தன், ப. குமாரசிங்கம், சேதுபதி, இ.பொன்னம்பலநாதன், தவபாலன், சி.சிவச்செல்வன், வி.சுவிஸ்கரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன், மனித உரிமை செயற்பாட்டாளர் சத்தியானந்தன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.









