Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, August 15, 2012


  15 August 2012
Photograph Twitter @rkguruparan
Protesters gathered by Jaffna bus stand, demanding justice to the murdered Tamil political prisoners - Nimalaroopan and Dilrukshan.
See here for report on Uthayan.
Despite the presence of police officers and intelligence officers within and around the crowd, protesters gathered in this morning. Shouting slogans such as “the deaths of Nimalaroopan and Dilrukshan need justice”, and “we’ll send the murderous regime home”, protesters  held banners and placards demanding that the those responsible be punished.
Photographs Uthayan
The protest was organised by the TNPF (Tamil National People’s Front), and was endorsed by a wide cohort of other parties including the TNA and the Democratic People’s Front.
Slogan reads “Don’t they have a right to life? Dilrukshan and Nimalaroopan
Slogan reads - “Justice is needed, justice is needed. The massacre of Nimalaroopan and Dilrukshan needs justice”
 வlogonbanner-1வுனியா சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்சன் ஆகியோர் படுகொலைகளைக் கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்.நகரில் நடாத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் “நிமலரூபன் டெல்றொக்சனின் படுகொலைக்கு நீதிவேண்டும்”, ‘வீட்டுக்கு அனுப்புவோம் கொலைவெறி அரசை வீட்டுக்கு அனுப்புவோம்”, “கருணாவும் பிள்ளையானும் சிம்மாசனத்தில் அப்பாவி நிமலரூபன் கொலைக்களத்தில், உயிர்வாழ உரிமை இல்லையா?” “ஜனநாயக மனித உரிமைகளை மிதிக்காதே” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய், எங்கள் நிலங்களில் எங்களை வாழவிடு போன்ற கோசங்களை எழுப்பி தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர். 
இவர்கள் இருவரது கொலைகளைக் கண்டித்தும் ஏனைய தமிழ் அரசியற் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும்  சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் இப் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோசலியசக் கட்சி,நவசமாசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மற்றும்   ஆகியன   அரசியல் அமைப்புக்கள் என்ற ரீதியிலும், அவர்களுடன் அரசியற் கைதிகளின் உறவினர்களும் இப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ, சரவணபவன், சிறீதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார், கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், அத்துடன் ஐக்கிய சோசலிசக் கட்சியின் உறுப்பினர் தம்மிக்க சில்வா, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பு உறுப்பினரான ஹென்றிக் காமினி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி 12 மணியளவில் நிறைவு பெற்றது.அத்துடன் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர். 
அத்துடன் இன்றைய தினம் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் போது யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிக்ள் சிலர் மக்களோடு மக்களாக நின்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்ததனைப் அவதானிக்க முடிந்தது.
எனினும் இராணூவம் மற்றும் பொலிஸ் பிரசன்னம் பார்ப்பதற்கு குறைக்கப்பட்டது போல் வெளியில் தெரிந்தாலும் மக்களோடு மக்களாக புலனாய்வுத்துறையினர் அதிகமானவர்கள் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
எனினும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி ஏற்பட்ட அசம்பாவிதத்தை அடுத்து  சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கைதிகள் மீது நடாத்திய கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அதில் படுகாயங்களுக்குள்ளாகிய கைதிகள் அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு சிறை அதிகாரிகளது சப்பாத்துக்களை நக்குமாறு கூறி மீண்டும் தாக்கப்பட்டனர்.
அதனையடுத்து இவர்கள் அனைவரும் மகர சிறைக்கு மாற்றப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான 38 கைதிகளில் நிமலரூபன் மோசமான அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகமை வைத்தியசாலையில் மரணத்தைத் தழுவிக் கொண்டான்.
அவனது மரணத்திற்கு சாட்சியாக இவனது கால்கள் முறிக்கப்பட்டு உடல்எங்கும் அடிகாயங்கள் இருக்கும் போது  இவன் மாரடைப்பில் இறந்ததாக அரசு கூறிவருகின்றது. இது அப்பட்டமான பொய். தொடர்ந்து அவனது இறுதிக் கிரிகைகளுக்குக் கூட அரசு அவர்களது பெற்றோரை சுதந்திரமாக செயற்படவிடவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.
அதுபோல மோசமான தாக்குதலுக்கு இலக்காகி ஒன்றரை மாதங்களாக ராகமை வைத்தியசாலையில் கோமா நிலையில்  இருந்த டெல்றொக்சன் கடந்த 8ஆம் திகதி மரணடைந்தான். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது கூட இவனது கால்கள் கங்கிலியால் கட்டப்பட்டே இருந்தது.
மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு அரசு இவ்வாறு செய்திருந்த செயல் மிருகத்தனமானது என்பது குறிப்பி டத்தக்கது.